Thursday, August 24, 2006

கறுப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு !

கடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய Dr.ராமதாஸ், வீரப்ப மொய்லி பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தும், இடஒதுக்கீட்டில் அவரது நிலைப்பாடு பிற்பட்டவருக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் அவர் தமிழ்நாட்டுக்கு இனி வருகை தரும்போது அவருக்கு எதிராக பாமக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் கூறினார். சிறிது காலத்திற்கு முன் கறுப்பு பெயிண்ட் பூசி கலாட்டா, இப்ப கறுப்புக்கொடி ! வீரப்ப மொய்லிக்கு கறுப்புக் கொடி காட்டினால், தமிழக காங்கிரஸ்காரர்கள் சும்மா இருப்பார்களா என்று பார்க்க வேண்டும் !

மேலும், வீரப்ப மொய்லி க்ரீமி லேயரை இடஒதுக்கீட்டிலிருந்து தள்ளி வைக்க முயன்றதாகவும், அன்னை சோனியாவின் தலையீட்டால் தான், க்ரீமி லேயரின் தலை தப்பியது என்ற தகவலையும் ஐயா அளித்தார். க்ரீமி லேயர் க்ரீமி லேயரை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே !!! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இடஒதுக்கீட்டு விவாதத்தின்போது எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தது, தமிழக மக்களுக்கு அவர் இழைத்த துரோகம் என்று ராமதாஸ் கூறினார். ஐயா ஏதோ முடிவில தான் இருக்கார் போல இருக்கு ! ஒரு கூட்டணிக் கட்சியின் அமைச்சராகிய சிதம்பரத்திடம் இது குறித்து பேசித் தெளிவதற்கு முன், இவ்வாறு ராமதாஸ் பேசியிருக்க வேண்டாம் எனத் தோன்றுகிறது.

அடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தமாக ஒரு வெடி வைத்தார் ! பா.ம.கவைத் தவிர, மற்ற கட்சிகள் 'கூட்டணி தர்மத்தை' கடைபிடிக்காததால் தான், பாமக கிட்டத்தட்ட 13 இடங்களில் தேர்தலில் தோற்றது என்றும், முக்கியமாக விருத்தாசலம் (கேப்டனை இனிமேல் யாரும் அங்கே அசைக்க முடியாது போலத் தெரிகிறது!) மற்றும் புவனகிரி ஆகிய பாமக கோட்டைகளில் தன் கட்சி தோற்றது என்றும் கூறினார். மேலும் திமுக வேட்பாளர்களான ஆதிசங்கரும், வெங்கடபதியும், பாமகவின் ஆதரவால், அவர்கள் வன்னியராக இல்லாத போதும் வன்னியர் அதிகம் வாழும் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக (இதில் பெருமிதம் கொள்ள என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை!!!) கூறினார்.

ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் விரிசலுக்கான ஆரம்ப அறிகுறிகள், இவ்வளவு சீக்கரமாகவா ??? மக்கள் வரிப்பணத்தை விரயம் பண்ணி இன்னொரு தேர்தல் தேவையா ? கஷ்டமோ, நஷ்டமோ, அட்ஜஸ்ட் பண்ணி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையா இருந்தா நல்லது :)

என்றென்றும் அன்புடன்
பாலா

19 மறுமொழிகள்:

Boston Bala said...

கம்யூனிஸ்ட்களும் கடுப்பில் இருக்கிறார்கள். கடந்த சில நாள்களில் பிரகாஷ் காரத் விமர்சனங்களையும் காங்கிரஸ் ஆட்சியின் பாதகங்களையும் பொதுமேடைகளில் பேசி வருகிறார்.

IndianExpress.com :: Is Congress cosying up to the common man?: "The polls are nowhere in sight, but the heat is on. The Congress is on the defensive and the Left seems out to upset the applecart. Or is it all just a ploy to bring Rahul to the centrestage for 2009? "

said...

1. வைகோ விவகாரத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு
2. இட ஓதுக்கீடு விவகாரத்தில் ராமதாஸ் காங்கிரஸ் மீது பாய்ச்சல்

என்னடா இது கூட்டணி என இவ்வளவு காலமாய் ஆச்சரியப்பட்டிருந்தேன். இப்போதுதான் கூட்டணி தர்மத்தை பின்பற்ற துவங்கியிருக்கிறார்கள் ;)

enRenRum-anbudan.BALA said...

பாஸ்டன் சார்,
நன்றி. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை படித்தேன் !
விக்னேஷ்,
கருத்துக்களுக்கு நன்றி ! என்ன கூட்டணி தர்மமோ :)
என்றென்றும் அன்புடன்
பாலா

dondu(#11168674346665545885) said...

"க்ரீமி லேயர் க்ரீமி லேயரை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே !!!"
இதே க்ரீமி லேயரை எம்.ஜி.ஆர். அவர்களும் ஒதுக்க முயற்சித்தார். 1980-ல் லோக் சபா தேர்தலில் அவர் தோல்வியுற்றதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்து விட்டது.

இந்த க்ரீமி லேயர் கும்பல் சக்தி வாய்ந்தது. தங்கள் சாதியினரில் ஏழைகள் முன்னுக்கு வர வேண்டுமென எண்ணம் சிறிதும் இல்லாதது. இவர்களிடம் எல்லாம் பேசினால் ஒன்றும் காரியத்துக்காகாது.

கட்சியில் ஏழைத் தொண்டர் உயிரை விடுவார், தலைவரின் மகன் அல்லது பேரன் அலுங்காமல் நலுங்காமல் மந்திரியாவார். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை என்று கட்சி கொபசெ ஆக பணிபுரியும் வலைப்பதிவாளர்கள் இடுகை இடுவார்கள்.

விழிப்படைய வேண்டியது அடிப்படைத் தொண்டர்கள் மட்டுமே. அடைவார்களா? மில்லியன் டாலர் கேள்வி அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,
கருத்துக்களுக்கு நன்றி.
//இந்த க்ரீமி லேயர் கும்பல் சக்தி வாய்ந்தது. தங்கள் சாதியினரில் ஏழைகள் முன்னுக்கு வர வேண்டுமென
எண்ணம் சிறிதும் இல்லாதது.
//
க்ரீமி லேயர் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டும் என்பது தான் என் எண்ணமும். ஆனால், மத்திய
அரசு, பாமக மற்றும் திமுக தயவில் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது க்ரீமி லேயரை விலக்குவது
அவ்வளவு சுலபமில்லை, நீங்கள் சொல்வது போல !!! க்ரீமி லேயர் இடஒதுக்கீட்டுப் பயனின் க்ரீமை (கேக்கின் மேல் இருக்கும் க்ரீம் போல!!!) அனுபவித்து வருகிறது இல்லையா ???

//இவர்களிடம் எல்லாம் பேசினால் ஒன்றும் காரியத்துக்காகாது.
//
வேறென்ன செய்யலாம் என்கிறீர்கள்,புரியவில்லையே ??

//தலைவரின் மகன் அல்லது பேரன் அலுங்காமல் நலுங்காமல் மந்திரியாவார். அதில் ஒன்றும்
பிரச்சினையில்லை என்று கட்சி கொபசெ ஆக பணிபுரியும் வலைப்பதிவாளர்கள் இடுகை இடுவார்கள்.
//
தெரிந்த விஷயம் தானே :) எனக்குத் தெரிந்து நண்பர் குழலி மட்டுமே தன்னை கொபசெ என்று கூறினாலும் பரவாயில்லை என்று ஒரு முறை சொன்னார்.

//விழிப்படைய வேண்டியது அடிப்படைத் தொண்டர்கள் மட்டுமே. அடைவார்களா? மில்லியன் டாலர்
கேள்வி அது.
//
இது அஞ்சு பைசா கேள்வி ;-) பதில்: அவர்கள் விழிப்படைய மாட்டார்கள், சூழல் அப்படி, அவர்கள்
அப்படியே இருந்தால் தான் கட்சிகளுக்கு நல்லது !!! படித்தவர்களில் சிலரே தொண்டர்கள் லெவலுக்கு
இருப்பதாகத் தான் தோன்றுகிறது :-(

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

//க்ரீமி லேயர் க்ரீமி லேயரை ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தானே !!!
//
அது ....

said...

என்னப்பா இது...பா.ம.க & ராமதாஸ் மேட்டர் ஓடிக்கினு இருக்குது....குழலி இன்னுமா வரலை....சொல்ல எதுனா வச்சுருப்பாரே :))

Unknown said...

:))))))))))))))))))))))))))))

enRenRum-anbudan.BALA said...

அனானி,
//என்னப்பா இது...பா.ம.க & ராமதாஸ் மேட்டர் ஓடிக்கினு இருக்குது....குழலி இன்னுமா வரலை....சொல்ல எதுனா வச்சுருப்பாரே :))
//
ஏதாவது சொன்னார்னா, இருக்கவே இருக்குது "குட்டிக் கதை" ;-)

enRenRum-anbudan.BALA said...

மகி,
ரசித்து " :)))))))))))))))))))))))))))) " இவ்வளவு சிரித்ததற்கு நன்றிகள் பல !!!

Unknown said...

ஏன் சிரிச்சேன்னு கேக்க மாட்டிங்களா?

enRenRum-anbudan.BALA said...

//ஏன் சிரிச்சேன்னு கேக்க மாட்டிங்களா?

//
I am waiting for the answer, whatever it might be :))

Unknown said...

இல்ல க்ரீமி லேயர் க்ரீமி லேயர்னு சொல்றாங்களே அது எதுவும் முகத்துக்கு பூசுற க்ரீமான்னு பக்கத்துல ஒரு ஆள் கேட்டார், எனக்கும் தெரியலை அதான் சிரிச்சேன் :)

ஆமா இதே ராமதாசு வீரப்ப மொய்லிகூட ஒத்துப் போயிருந்தா என்ன சொல்வீங்கன்னு சொல்லவா?
"கூட்டணிக்காகவும் பதவிக்காகவும் கொள்கையை அடமானம் வைத்துவிட்டார் மருத்துவர்னு எழுதுவீங்க" இல்லையா?

enRenRum-anbudan.BALA said...

//
ஆமா இதே ராமதாசு வீரப்ப மொய்லிகூட ஒத்துப் போயிருந்தா என்ன சொல்வீங்கன்னு சொல்லவா?
"கூட்டணிக்காகவும் பதவிக்காகவும் கொள்கையை அடமானம் வைத்துவிட்டார் மருத்துவர்னு எழுதுவீங்க" இல்லையா?
//
I will not blindly say like that, if you would like to believe me !!!

Unknown said...

உங்களின் பின்னூட்டங்களும் சரி உங்கள் பதிவுக்கு வரும் பின்னுட்டங்களுக்கான பதில்களும் சரி ஏன் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் அதிகம் இருக்கின்றன? என்னைப்போல் ஆங்கிலம் சரியாக தெரியாத நபர்கள் உங்கள் பதிலை புரிந்துகொண்டு அதை பின்னூட்டத்தை சரியாக புரிந்துகொள்ளுவார்களா? க்ரீமி லேயர் ஒரு உதாரணம்

enRenRum-anbudan.BALA said...

மகி,
தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், க்ரீமி லேயர் என்ற பதம் இங்கே பலராலும் கையாளப்பட்டு வருகிறது. அது பிற்பட்டவரில் பொருளாதாரத்தில் மேல் இருப்பவர் என்று குறிப்பிடப்பட வேண்டும். பெரும்பாலும், தமிழில் தான் பதில் தர முயற்சிக்கிறேன். அவசரத்தில் இருக்கும்போதோ, தமிழில் தட்டச்சு செய்ய வசதி இல்லாதபோதோ, ஆங்கிலத்தில் எழுதி விடுவது உண்மை தான். அதே போல், யாராவது ஆங்கிலத்துக்கு தாவினால், நானும் தாவி விடுகிறேன் !! நகைச்சுவையாக பதில் தரும் சமயங்கள் தவிர, மற்ற நேரங்களில், தவிர்க்க முயல்கிறேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

வணக்கத்துடன் said...

பாலா,
// மக்கள் வரிப்பணத்தை விரயம் பண்ணி இன்னொரு தேர்தல் தேவையா ? //

இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனம் நாட்டின் பொருளாதாரத்திற்கு எவ்வளவு நல்லது என்பதை தெளிவாக்கிய வரிகள்!

// மகேந்திரன்.பெ said...

உங்களின் பின்னூட்டங்களும் சரி உங்கள் பதிவுக்கு வரும் பின்னுட்டங்களுக்கான பதில்களும் சரி ஏன் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் அதிகம் இருக்கின்றன? என்னைப்போல் ஆங்கிலம் சரியாக தெரியாத நபர்கள் உங்கள் பதிலை புரிந்துகொண்டு அதை பின்னூட்டத்தை சரியாக புரிந்துகொள்ளுவார்களா? க்ரீமி லேயர் ஒரு உதாரணம்//

மகேந்திரனுக்கு தமிழ் தெரியாதா? கிரீமி லேயரை மூஞ்சில பூசிப்பாராம். 'கோட்டா'ன்னு சொன்னா, கோட்டான் என நினைச்சு 'எங்களுக்கு கோட்டா வேனாம்'னு சொல்லுவாரா?

// enRenRum-anbudan.BALA said...
மகி,
தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.//

திசை திருப்பு முயற்சிகளுக்கு இடம் கொடுத்து விட்டீர்களே பாலா! டோண்டு சார் என்னன்னு கேளுங்க.

என்னமோ போங்க...

Muse (# 01429798200730556938) said...

பாலா,

இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்கக்கூடாது என்று சொல்லுபவர்கள் இந்த க்ரீம் லேயர் விஷயத்தை எதிர்ப்பவர்களாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமளிப்பது இல்லை.

இப்படியெல்லாம் மற்றவரை அடக்கிவைக்கத்தானே திராவிட கழகங்களே தோன்றின. இவற்றின் அடிவருடிகள் வேறு எப்படி பேசுவார்கள்.

enRenRum-anbudan.BALA said...

வணக்கத்துடன்,
நன்றி.
//மகேந்திரனுக்கு தமிழ் தெரியாதா? கிரீமி லேயரை மூஞ்சில பூசிப்பாராம். 'கோட்டா'ன்னு சொன்னா, கோட்டான் என நினைச்சு 'எங்களுக்கு கோட்டா வேனாம்'னு சொல்லுவாரா?
//
மகி கிட்ட வேணாம், சொல்லிபுட்டேன் ;-)

Muse,
க்ரீமி லேயரை விலக்க வேண்டும். க்ரீமி லேயருக்கான வரையறை என்னவென்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் !
எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails